சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு : திருமணிமுத்தாறு (Thirumanimuthaaru) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
திருமணிமுத்தாறு (Thirumanimuthaaru)![]() திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. 25 அணைகள். 290 ஏரிகள் திருமணிமுத்தாற்றின் நீரை நம்பியுள்ளது உற்பத்தி இடம்: சேர்வராயன் மலைத்தொடரின் மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள காப்புக் காடுகளில் உற்பத்தியாகிறது. சேர்வராயன் மலையின் தெற்கு, மேற்கு பகுதி, கொல்லிமலையின் மேற்கு பகுதி, போதமலை, அலவாய்மலை கஞ்சமலை, ஜல்லூத்து மலை, பெருமாள் மலை, நைனாமலை, பசிரிமலை, சொரிமலை, உள்ளிட்ட சிறு மலை பகுதிகளில் பெய்யும் மழை நீர் பல ஓடைகள் வழியாக ஏரிகளை நிரப்பி கடைசியில் திருமணிமுத்தாறில் சங்கமிக்கின்றது. பயணிக்கும் பகுதிகள்: சேலம் மாநகரம், வெண்ணந்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளின் வழியே பாய்கிறது. கழிமுகம்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் இணைகிறது. துணை ஆறுகள்: ஏளூர் நதி (போதமலை தெற்கு சரிவு), பவுனாறு அல்லது தங்கநதி (கஞ்சமலை சிற்றோடை) மற்றும் கன்னிமார் ஓடை ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும். பவுனாறு அல்லது தங்க நதி: சேர்வராயன் மலையில் குருமம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உற்பத்தியாகும் கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்க நதி சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகில் கோனேரிகரை என்ற இடத்தில் திருமணிமுத்தாற்றில் கலக்கும் துணை ஆறு ஆகும். பொன்னி ஆறு: மகுடஞ்சாவடி அருகில் உற்பத்தி ஆகும் பொன்னி ஆறு பருத்திபள்ளி என்ற ஏரியில் திருமணிமுத்தாற்றில் கலக்கும் துணை ஆறு ஆகும். பருத்திப்பள்ளி ஏரி அமிர்தவள்ளி என்ற தேவதாசி வாய்கால் வெட்ட தானம் கொடுத்த பணத்தில் வெட்டிய ஏரி என்பதால் அமிர்தசாகரம் வாய்கால் அமிர்தவள்ளி வாய்க்கால் என்ற பெயருடன் உள்ளது. பருத்திபள்ளி ஏரிக்கும் அமிர்தசாகரம் , அமிர்தவள்ளி வாய்கால் என்ற பெயர் உள்ளது ஏரி உருவாக்கியதற்காக உயிர் தியாகம் செய்த மல்லசமூத்திரம் குறு நில மன்னர் அகளங்க சோழன் @ பகதூர் விஜயராகவ தொண்டமான் மன்னர் காலத்தில் இந்த ஏரியை வெட்டியுள்ளார்.இவர் உருவாக்கிய ஏழு பெரும் ஏரிகள் 1. கொழந்கோண்டை ஏரி, 2. மல்லசமுத்திரம் சின்ன ஏரி, 3. ஊமையாம்பட்டி பெரிய ஏரி, 4. செட்டி ஏரி, 5. கோட்டப்பாளையம் ஏரி, 6. பருத்திப்பள்ளி ஏரி, (அமிர்தசாகர் ஏரி )7. மங்களம் ஏரி போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதி அல்லது போதமலை ஆறு (கொல்லிமலையில் உற்பத்தியாகும் கோரையாறு, பாலாறு, பழனியப்பார் கோவில் ஆறு செங்குட்டை ஆறு ஆகியவை இணைந்து) கூடசேரி அருகில் திருமணிமுத்தாறில் கலக்கின்றது. போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதி அல்லது போதமலை ஆறு (போதமலையில் பெய்யும் மழை நீர்) ஆலத்தூர் ஏரி பட்டணம் ஏரி கோனேரிப்பட்டி ஏரி தட்டான்குட்டை ஏரி அணைப்பாளையம் ஏரி, (இராசிபுரம் ஒன்றியம்) ஏகே.சமுத்திரம் ஏரி, கல்யானி ஏரி, நவனி ஏரி, ஏழூர் ஏரி, (புதுசத்திரம் ஒன்றியம்) முசிரி ஏரி, புதுர் ஏரி (எலச்சிபாளையம் ஒன்றியம்) பிராந்தகம் ஏரி, (நாமக்கல் ஒன்றியம்) இரட்டனை ஏரி வழியாக கூடச்சேரியில் ( பரமத்தி ஒன்றியம்) இறுதியில் திருமணிமுத்தாற்றில் கலக்கின்றது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. மாசுபாடு: தொழிற்சாலைக் கழிவுகள் (சாயப்பட்டறை, ஜவுளி மற்றும் சவ்வரிசி ஆலைக் கழிவுகள்), சுத்திகரிக்கப்படாத நகராட்சி கழிவுநீர் மற்றும் விவசாயக் கழிவுகள் கலப்பதால் ஆறு கடுமையாக மாசடைந்துள்ளது. பல இடங்களில் கருமை நிற நீர் மற்றும் நுரை பொங்கும் நிலை காணப்படுகிறது. திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள்: மேட்டூர் அணை உபரி நீரை திருமணிமுத்தாற்றுடன் இணைக்கும் திட்டம், நீரை முறையாகப் பிரித்து வழங்கும் கோரிக்கை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை. திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம். சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று ‘சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்கிறது. திருமணிமுத்தாறு தற்போது மாசுபட்டும், குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆற்றின் வழிப்பாதைகள் விவசாய நிலங்களாகவும், மாநகராட்சி கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலிருந்து ஓடிவரும் ஓடைகளில் விடப்பட்டு, வெளியேற்றும் தலமாக மாறிவிட்டது.திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சேலத்தில் வலுத்துள்ளது. குறிப்பாக மேட்டூர் வெள்ள உபரி நீரைக் கொண்டுவந்து வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, பனமரத்துப்பட்டி ஏரியுடன் சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். |