வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி (Villivakkam Assembly Constituency)


2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
கார்த்திக் மோகன் (திமுக)
S.R. விஜயகுமார் (அஇஅதிமுக)
ரோஷிணி (நாதக)
ஆதவ் அர்ஜுனா (தவெக)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மக்களவைத் தொகுதி மத்திய சென்னை
தொகுதி உருவாக்கம் 1977
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள் 78,671
பெண் வாக்காளர்கள் 84,668
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 33
மொத்த வாக்காளர்கள் 1,63,372


1977 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாநகரின் ஒரு முக்கிய தொகுதியாகும். இந்தத் தொகுதி வில்லிவாக்கம், கொரட்டூர், பேசின் பாலம் போன்ற பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64 ஆகியவை இத்தொகுதிக்குள் அடங்கும். இதன் தொகுதி எண் 14.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில், 1977-ம் ஆண்டுமுதல் 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற 11 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு தடவை வெற்றி பெற்றிருக்கிறது.

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 37,237 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் வெற்றி பெற்று இருக்கிறார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
1977 க. சுப்பு (திமுக) - 37,327
ஆர். ஈசுவர் ராவ் (அஇஅதிமுக) -29,429
1980 ஜே.சி.டி. பிரபாகரன் (அஇஅதிமுக) - 57,192
க. சுப்பு (திமுக) - 56,489
1984 வி. பி. சித்தன் (சிபிஎம்) - 81,595
ஜே.சி.டி. பிரபாகரன் (அஇஅதிமுக) - 80,549
1989 உ. ரா. வரதராஜன் (சிபிஎம்) - 99,571
டி. பாலசுப்பிரமணியன் (அஇஅதிமுக) -40,150
1991 ஜி. காளன் (காங்) - 1,18,196
உ. ரா. வரதராஜன் (சிபிஎம்) - 71,963
1996 ஜே.எம். ஆரூண்ரஷீத் (தமாகா) - 1,94,471
எம். ஜி. மோகன் (காங்) - 46,724
2001 துரைசாமி நெப்போலியன் (திமுக) - 1,64,787
எ. செல்லக்குமார் (தமாகா) - 1,55,557
2006 ப. ரங்கநாதன் (திமுக) - 2,78,850
ஜி. காளன் (அஇஅதிமுக) - 2,48,734
2011 ஜே.சி.டி. பிரபாகர் - (அஇஅதிமுக) - 68,612
க. அன்பழகன் (திமுக) - 57,830
2016 ப. ரங்கநாதன் (திமுக) - 79,974
தாடி எம் ராமு (அஇஅதிமுக) - 56,651
2021 அ. வெற்றியழகன் (திமுக) - 76,127
ஜே.சி.டி. பிரபாகர் (அஇஅதிமுக) - 38,890


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்