திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி (Tiruvallur Assembly Constituency)


2026 தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
டாக்டர் T. அருண் குமார் (தவெக)
92,190
வி.ஜி. ராஜேந்திரன் (திமுக)
67,430
B.V. ரமணா (அஇஅதிமுக)
56,562
கு. செந்தில்குமார் (நாதக)
5,513


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
மக்களவைத் தொகுதி திருவள்ளூர்
தொகுதி உருவாக்கம் 1952
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள்
1,22,198
பெண் வாக்காளர்கள்
1,28,784
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்
36
மொத்த வாக்காளர்கள்
2,51,018


திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. இதன் தொகுதி எண் 4. 1952ஆம் ஆண்டு இத் தொகுதி தோற்றுவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், பூந்தமல்லி (தனி), திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

பட்டியல் இன மக்கள், பழங்குடியினர் மற்றும் வன்னியர் சமூக மக்கள் இங்கு அதிக அளவில் வசிக்கின்றனர். திருவள்ளூர் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி, இங்குதான் அமைந்திருக்கிறது.

இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அதில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 1 முறையும் வென்றிருக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக-வைச் சேர்ந்த வி.ஜி.ராஜேந்திரன், 2021 தேர்தலிலும் தொகுதியைத் தக்கவைத்து, தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
1951 எம். தர்மலிங்கம் (கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி) - 32,599
வி. கோவிந்தசாமி நாயுடு (கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி) - 28,462
1957 என். ஏகாம்பர முதலியார் (காங்) - 40,214
வி.எஸ். அருணாசலம் (காங்) - 34,689
1962 வி.எஸ். அருணாசலம் (காங்) - 21,609
எஸ்.எம். துரைராஜ் (திமுக) - 17,175
1967 எஸ்.எம். துரைராஜ் (திமுக) - 40,687
வி.எஸ். அருணாசலம் (காங்) - 19,030
1971 எஸ். எம். துரைராசு (திமுக) - 36,496
வி.எஸ். அருணாசலம் (ஸ்தாபன காங்கிரஸ்) - 17,759
1977 எஸ். பட்டாபிராமன் (அஇஅதிமுக) - 30,670
முனிரத்தினம் நாயுடு (ஜனதா கட்சி) - 22,368
1980 எஸ். பட்டாபிராமன் (அஇஅதிமுக) - 30,121
ஆர். புருஷோத்தமன் (காங்) - 32,159
1984 எஸ். பட்டாபிராமன் (அஇஅதிமுக) - 44,461
எஸ்.ஆர். முனிரத்தினம் (திமுக) - 39,908
1989 எஸ்.ஆர். முனிரத்தினம் (திமுக) - 45,091
எம். செல்வராஜ் (அதிமுக (ஜெ)) - 22,852
1991 தே. ஜக்குபாய் (அஇஅதிமுக) - 54,267
சி. சுப்பரமணி (திமுக) - 27,847
1996 சி. சுப்பரமணி (திமுக) - 65,432
ஜி. கனகுராஜ் (அஇஅதிமுக) - 32,178
2001 டி. சுதர்சனம் (தமாகா) - 47,899
வி.ஜி. இராஜேந்திரன் (புதிய நீதி கட்சி) - 27,948
2006 ஈ.ஏ.பி. சிவாஜி (திமுக) - 64,378
பி.வி. ரமணா (அஇஅதிமுக) - 55,454
2011 பி.வி. ரமணா - (அஇஅதிமுக) - 91,337
ஈ.ஏ.பி. சிவாஜி (திமுக) - 67,689
2016 வி.ஜி. ராஜேந்திரன் (திமுக) - 80,473
அ. பாஸ்கரன் (அஇஅதிமுக) - 76,335
2021 வி.ஜி. ராஜேந்திரன் (திமுக) - 1,63,154
பி.வி. ரமணா - (அஇஅதிமுக) - 85,008


1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் கோவிந்தசாமி நாயுடு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.

1957-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்