திருத்தணி சட்டமன்றத் தொகுதி (Tiruttani Assembly Constituency)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
தொகுதி உருவாக்கம் 1951
தொகுதி ஒதுக்கீடு பொது
மொத்த வாக்காளர்கள்


1952 ஆந்திரப் பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள திருத்தணி தொகுதி 1951ஆம் தோற்றுவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி எண் 3.

திருவள்ளூர், பூந்தமல்லி, திருப்பெரும்புதூர், பள்ளிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பள்ளிப்பட்டு வட்டம், திருத்தணி வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது இத்தொகுதி.

திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் 1951 தொடங்கி 15 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், தமிழரசுக் கழகம் 1 முறையும், தேமுதிக 1 முறையும், பாமக 1 முறையும், சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அதிமுக ஆதிக்கம் செலுத்திவந்த திருத்தணி தொகுதியை, கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரன் கைப்பற்றியதையடுத்து, தற்போது திமுக வசமிருக்கிறது.

1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு மற்றும் கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள்.

2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்


முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
1951 எம். துரைக்கண்ணு (காங்) - 24,312
கிடம்பை வரதாச்சாரி (காங்) - 21,125
1962 சி. சிரஞ்சீவலு நாயுடு (சுயேச்சை) - 36,884
எ.ச. தியாகராஜன் முதலியார் (காங்) - 34,176
1967 கே. விநாயகம் (காங்) - 27,123
வி.கே. குப்புசாமி (திமுக) - 25,337
1971 எ.ச. தியாகராஜன் முதலியார்(தமிழரசுக் கழகம்) - 43,436
எ. ஏகாம்பர ரெட்டி (ஸ்தாபன காங்கிரஸ்) - 26,938
1977 ஆர். சண்முகம் (அஇஅதிமுக) - 29,070
எ.பி. இராமச்சந்திரன் (திமுக) - 18,754
1980 ஆர். சண்முகம் (அஇஅதிமுக) - 35,845
டி. நமச்சிவாயம் (காங்) - 25,754
1984 ஆர். சண்முகம் (அஇஅதிமுக) - 1,669
சி. சிரஞ்சீவலு நாயுடு (ஜனதா கட்சி) - 37,740
1989 பொ. நடராசன் (திமுக) - 35,555
முனு ஆதி (அஇஅதிமுக-ஜெ) - 26,432
1991 கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு (அஇஅதிமுக) - 50,037
சி. சிரஞ்சீவலு நாயுடு (ஜனதா தளம்) - 27,845
1996 ஈ.ஏ.பி. சிவாஜி (திமுக) - 58,049
கோ. ஹரி (அஇஅதிமுக) - 28,507
2001 கோ. இரவிராஜ் (பாமக) - 58,549
ஈ.ஏ.பி. சிவாஜி (திமுக) - 44,675
2006 கோ. ஹரி (அஇஅதிமுக) - 52,871
கோ. இரவிராஜ் (பாமக) - 51,955
2011 மு.அருண் சுப்பிரமணியம் (தேமுதிக) - 95,918
டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் (காங்) - 71,988
2016 பி. எம். நரசிம்மன் (அஇஅதிமுக) - 93,045
அ.கா. சிதம்பரம் (திமுக) - 69,904
2021 ச. சந்திரன் (திமுக) - 1,18,005
கோ. ஹரி (அஇஅதிமுக) - 91,061


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்