திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvottiyur Assembly Constituency) |
திருவொற்றியூர் தொகுதி 1967 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 10. திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளையும், திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதி. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பிரசித்திப் பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், சென்னை உரத் தொழிற்சாலை மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தொகுதியில் இருப்பது இதன் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இத்தொகுதியில் மீன்பிடித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. திருவொற்றியூர் தொகுதியில், நாடார், மீனவர், முதலியார் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். திருவொற்றியூர் தொகுதி, கடந்த காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் கோட்டையாக மாறி மாறி இருந்திருக்கிறது. 1967 முதல் 2016 வரையிலான 13 தேர்தல்களில், தி.மு.க (1967,1971,1981,1996, 2006, 2016,2021) 7 முறையும், அ.தி.மு.க. (1977,1991,2001, 2011) 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் (1980), ஒரு முறை காங்கிரஸும் (1984) வெற்றிப் பெற்றுள்ளன.
2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 47,757 வாக்குகள் பெற்றார். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||