ராயபுரம் சட்டமன்றத் தொகுதி (Royapuram Assembly Constituency) |
வட சென்னையின் கடற்கரையோரம் இருக்கும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதி வட சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2011-ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. தற்போது இதன் தொகுதி எண் 17. ராயபுரம் தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 43 முதல் 53 வரையிலான வார்டுகள் இடம் பெற்றுள்ளன. 1856-ம் ஆண்டு ராயபுரத்திலிருந்து வாலாஜாவுக்கு முதல்முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த ராயபுரம் ரயில் நிலையம், பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளின் பரிந்துரை மருத்துவமனையாக திகழும் ஸ்டான்லி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, புனித பீட்டர்ஸ் தேவாலயம் ஆகியவை இத்தொகுதியில் அமைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோர் நினைவிடம் ஆகியவை இந்தத் தொகுதியில் இடம்பிடித்திருக்கிறது. இந்த தொகுதியில் 55 சதவிகித மீனவர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் இஸ்லாமியர்கள், நாடார், வன்னியர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். எனவே, வெற்றியை கணிக்கும் சக்தியாக மீனவ சமுதாய மக்களே இந்த தொகுதியில் கவனம் பெருகின்றன. ராயபுர ரயில் நிலயத்தை 3-வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. 1977-ம் ஆண்டு சட்டமன்றத் தொகுதியாக தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தொகுதி, தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சிகள்தான் மாறி மாறி தங்கள் பலத்தை நிரூபித்திருக்கின்றன. இதுவரை 11 தேர்தல்கள் நடந்திருக்கும் நிலையில், 1977, 1980, 1984, 1989, 1996, 2021 ஆகிய 6 தேர்தல்களில் திமுகவும், 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய 5 தேர்தல்களில் அ.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||