பூந்தமல்லி (பூவிருந்தவல்லி) - தனி (SC) சட்டமன்றத் தொகுதி (Poonamallee (SC) Assembly Constituency) |
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 5. 1977 ஆம் ஆண்டு இத் தொகுதி தோற்றுவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் சில வட்டங்களும், பூவிருந்தவல்லி பகுதிக்குட்பட்ட சில வட்டங்களும் இந்தத் தொகுதியில் வருகின்றன. சென்னை மாவட்டத்தை எல்லையாகக் கொண்டிருக்கும் பூவிருந்தவல்லி, சென்னையின் முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. விவசாய பகுதியாகவும், தொழில் நகரமாகவும் பூவிருந்தவல்லி அறியப்படுகிறது. பொது தொகுதியாக இருந்த பூவிருந்தவல்லி, 2011-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. 1977-ல் முதல் தேர்தல் தொடங்கி, 12 சட்டமன்றத் தேர்தல்கள் (இடைத்தேர்தல் உட்பட) நடைபெற்றுள்ளன. அதில் திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், பாமக 1 முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏழுமலை இங்கு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாகப் பிரிய... அந்த நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக உறுப்பினர்களில் ஏழுமலையும் ஒருவர். அதன் பிறகு 2019-ல் இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றிபெற்றார். அவரே 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||