2026 தேர்தல் முடிவுகள் |
வேட்பாளர் (கட்சி) |
வாக்குகள் |
| டாக்டர் எம்.எஸ். ரவி (தவெக) |
1,10,439 |
| துரை சந்திரசேகர் (காங்) |
54,671 |
| சிறுணியம் P. பலராமன் (அஇஅதிமுக) |
51,468 |
| ராஜாத்தி. எம் (நாதக) |
6,676 |
தொகுதி விவரங்கள் |
| நாடு |
இந்தியா |
| மாநிலம் |
தமிழ்நாடு |
| மாவட்டம் |
திருவள்ளூர் |
| மக்களவைத் தொகுதி |
திருவள்ளூர் |
| தொகுதி உருவாக்கம் |
1952 |
| தொகுதி ஒதுக்கீடு |
தனி (SC) |
| ஆண் வாக்காளர்கள் |
1,22,296 |
| பெண் வாக்காளர்கள் |
1,29,066 |
| மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் |
35 |
| மொத்த வாக்காளர்கள் |
2,51,397 |
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தனித் தொகுதிகளில் பொன்னேரி தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதி 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி எண் 2.
பொன்னேரியில் வன்னியர், நாயுடு மற்றும் பட்டியலின சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பொன்னேரி வட்டம், ஆரணி பேரூராட்சி, பொன்னேரி நகராட்சி , மீஞ்சூர் பேரூராட்சி, அத்திப்பட்டு நகரம், ஆகிய பகுதியில் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
பிரபலமான பழவேற்காடு சுற்றுலாத்தலம் இந்த தொகுதியில்தான் அமைந்திருக்கிறது. மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களே இங்கு பிரதானமானவை.
1951 தொடங்கி 2021 வரை மொத்தம் 16 சட்டமன்றத் தேர்தல்களை, இந்தத் தொகுதி சந்தித்திருக்கிறது. அதில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) 1 முறையும், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 1 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.
1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த செங்கம் பிள்ளை மற்றும் கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள்.
1957-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. கோவிந்தசாமி நாயுடு மற்றும் டி.பி. ஏழுமலை இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள்.
2006, 2011, 2016 என 15 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த பொன்னேரி தொகுதி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் வெற்றிபெற, அந்தக் கட்சியின் வசம் தற்போது இருக்கிறது.
முந்தைய தேர்தல் விவரம் |
ஆண்டு |
விவரம் |
| 1951 |
ஒ. செங்கம் பிள்ளை (கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி) - 27,489
கணபதி ரெட்டியார் (கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி) - 25,626 |
| 1957 |
வி. கோவிந்தசாமி நாயுடு (காங்) - 32,119
டி.பி. ஏழுமலை (காங்) - 31,392 |
| 1962 |
டி.பி. ஏழுமலை (காங்) - 26,125
பி. நாகலிங்கம் (திமுக) - 15,721 |
| 1967 |
பி. நாகலிங்கம் (திமுக) - 37,746
டி.பி. ஏழுமலை (காங்) - 27,751 |
| 1971 |
பி. நாகலிங்கம் (திமுக) - 39,783
டி.பி. ஏழுமலை (ஸ்தாபன காங்கிரஸ்) - 21,650 |
| 1977 |
எஸ்.எம். துரைராஜ் (அஇஅதிமுக) - 31,796
ஜி. வெற்றிவீரன் (திமுக) - 20,524 |
| 1980 |
இரா. சக்கரபாணி (அஇஅதிமுக) - 42,408
பி. நாகலிங்கம் (திமுக) - 27,490 |
| 1984 |
கே.பி.கே. சேகர் (அஇஅதிமுக) - 61,559
கே. சுந்தரம் (திமுக) - 41,655 |
| 1989 |
க. சுந்தரம் (திமுக) - 51,928
கே. தமிழரசன் (அஇஅதிமுக-ஜெ) - 44,321 |
| 1991 |
இ. இரவிக்குமார் (அஇஅதிமுக) - 77,374
கே. பார்த்தசாரதி (திமுக) - 36,121 |
| 1996 |
க. சுந்தரம் (திமுக) - 87,547
ஜி. குணசேகரன் (அஇஅதிமுக) - 42,156 |
| 2001 |
ஏ.எஸ். கண்ணன் (இந்திய பொதுவுடமைக் கட்சி) - 81,408
க. சுந்தரம் (திமுக) - 54,018 |
| 2006 |
பா. பலராமன் (அஇஅதிமுக) - 84,259
வி. அன்பு வாணன் (திமுக) - 73,170 |
| 2011 |
பொன். ராஜா (அஇஅதிமுக) - 93,649
ஏ. மணிமேகலை (திமுக) - 62,576 |
| 2016 |
பா. பலராமன் (அஇஅதிமுக) - 95,979
டாக்டர் கே. பரிமளம் (திமுக) - 76,643 |
| 2021 |
துரை சந்திரசேகர் (காங்) - 94,528
ப. பலராமன் (அஇஅதிமுக) - 84,839 |
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்