பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி (Perambur Assembly Constituency)


2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
ஆர்.டி. சேகர் (திமுக)
ம. திலகபாமா (பாமக)
வெற்றித்தமிழன் (நாதக)
C. ஜோசப் விஜய் (தவெக)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மக்களவைத் தொகுதி வடசென்னை
தொகுதி உருவாக்கம் 1952
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள் 1,09,688
பெண் வாக்காளர்கள் 1,16,535
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 73
மொத்த வாக்காளர்கள் 2,26,296


1952 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பெரம்பூர் தொகுதி சென்னையில் உள்ள மிகப்பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 12.

கொடுங்கையூர், கண்ணதாசன்நகர், மகாகவி பாரதியார் நகர், எம்.ஆர்.நகர், முத்தமிழ் நகர், சர்மா நகர், பி.வி.காலனி, எருக்கஞ்சேரி, மூலக்கடை, வியாசர்பாடி, சத்தியமூர்த்திநகர், முல்லைநகர், கணேசபுரம் போன்ற பகுதிகள் பெரம்பூர் தொகுதியில் அடங்கியுள்ளன.

கல்வி, சுகாதாரம், ரயில் இணைப்புகள் ஆகியவற்றில் வளர்ச்சி பெற்றிருந்தாலும், சாலைகள், குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாடு போன்ற சவால்கள் இந்தத் தொகுதியில் தொடர்ந்து காணப்படுகின்றன.

1952- ம் ஆண்டு உருவான இந்தத் தொகுதியில், கடந்த 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற 17 சட்டமன்றத் தேர்தல்களில் 9 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும், 3 முறை கம்யூனிஸ்ட் கட்சியும், சுயேட்சை 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 54,976 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருந்தார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
1952 எஸ். பக்கிரிசாமி பிள்ளை (சோசலிச கட்சி) - 14,190
எம். சந்தோசம் (காங்) - 11,486
1957 எஸ். பக்கிரிசாமி பிள்ளை (சுயேச்சை) - 34,579
டி. எஸ். கோவிந்தசாமி (காங்) - 31,806
1962 டி. சுலோச்சனா (காங்) - 40,451
சத்தியவாணி முத்து (திமுக) - 32,309
1967 சத்தியவாணி முத்து (திமுக) - 40,364
டி. சுலோச்சனா (காங்) - 33,677
1971 சத்தியவாணி முத்து (திமுக) - 49,070
டி. சுலோச்சனா (காங்) - 37,047
1977 சு. பாலன் (திமுக) - 34,134
டி. ராஜா (அஇஅதிமுக) - 20,666
1980 சு. பாலன் (திமுக) - 41,845
வி. முருகையன் (சிபிஎம்) - 40,989
1984 பரிதி இளம்வழுதி (திமுக) - 53,325
சத்தியவாணி முத்து (அஇஅதிமுக) - 46,121
1989 செங்கை சிவம் (திமுக) - 65,681
பி. விஸ்வநாதன் (காங்) - 25,691
1991 எம்.பி. சேகர் (அஇஅதிமுக) - 62,759
செங்கை சிவம் (திமுக) - 47,307
1996 செங்கை சிவம் (திமுக) - 90,683
வி. நீலகண்டன் (அஇஅதிமுக) - 32,332
2001 கே. மகேந்திரன் (சிபிஎம்) - 69,613
செங்கை சிவம் (திமுக) - 52,390
2006 கே. மகேந்திரன் (சிபிஎம்) - 81,765
பி. மணிமாறன் (மதிமுக) - 78,977
2011 அ. சவுந்திரராஜன் - (சிபிஎம்) - 84,668
என்.ஆர். தனபாலன் (திமுக) - 67,245
2016 பி. வெற்றிவேல் (அஇஅதிமுக) - 79,974
என்.ஆர். தனபாலன் (திமுக) - 79,455
2021 ஆர்.டி. சேகர் (திமுக) - 1,06,394
ஆர். எஸ். ராஜேஸ் (அஇஅதிமுக) - 38,371


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்