மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி (Maduravoyal Assembly Constituency)


2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
காரம்பாக்கம் கணபதி (திமுக)
பா.பென்ஜமின் (அஇஅதிமுக)
ரேவதி (நாதக)
P. ரேவந்த் சரண் (தவெக)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளுர்
மக்களவைத் தொகுதி திருப்பெரும்புதூர்
தொகுதி உருவாக்கம் 2011
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள் 183965
பெண் வாக்காளர்கள் 189237
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 81
மொத்த வாக்காளர்கள் 373283


திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் முக்கியமான தொகுதி மதுரவாயல். 2011 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 7.

நெற்குன்றம், ராமாபுரம், போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், முகப்பேர், நொளம்பூர் ஆகிய முக்கிய பகுதிகள் அடங்கிய தொகுதி மதுரவாயல். வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகள், அம்பத்தூர் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட 2 வார்டுகள் வளசரவாக்கம் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட 13 வார்டுகள் இதில் இருக்கின்றன.

மதுரவாயல் தொகுதியில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரி ஆகியவை உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ள பல தொழிற்பேட்டைகள் பல்வேறு தொழிற்கூடங்கள் போன்றவற்றில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் தொகுதியாக காணப்படுகிறது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் மதுரவாயல் அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த தொகுதியில் மூன்று சட்டமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியும், 2016 தேர்தலில் அ.தி.மு.கவும், 2021-ல் திமுகவும் வெற்றிபெற்றன.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
2011 ஜி. பீம் ராவ் - (மா.கம்யூ) - 96,844
செல்வம் (பாமக) - 72,833
2016 பா. பெஞ்சமின் (அஇஅதிமுக) - 99,739
ரா. ராஜேஷ் (காங்) - 91,337
2021 காரம்பாக்கம் கணபதி (திமுக) - 1,21,298
பா. பெஞ்சமின் - (அஇஅதிமுக) - 89,577


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்