மாதவரம் சட்டமன்றத் தொகுதி (Madhavaram Assembly Constituency)


2026 தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
M.L. விஜய்பிரபு (தவெக)
1,90,462
எஸ். சுதர்சனம் (திமுக)
95,477
V. மூர்த்தி (பா.ம.க)
59,290
கிருத்திகா ஏழுமலை (நாதக)
12,637


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளுர்
மக்களவைத் தொகுதி திருவள்ளூர்
தொகுதி உருவாக்கம் 2011
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள்
2,11,240
பெண் வாக்காளர்கள்
2,20,475
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்
81
மொத்த வாக்காளர்கள்
4,31,796


2011-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது மாதாவரம் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 9.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பைக் கொண்ட தொகுதி இது.

இந்தத் தொகுதியில், சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான புழல் ஏரி, சோழவரம் ஏரி போன்றவையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புழல் மத்திய சிறைச்சாலை, மாதவரம் பால்பண்ணை மற்றும் சுமார் 100 அரிசி ஆலைகள், சேமிப்புக் கிடங்குகள் அமைந்திருக்கிறது.

மாதவரம் தொகுதியில், கடந்த 2011 தேர்தலில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. அதற்கு அடுத்து நடந்த 2016, 2021 தேர்தல்களில் திமுகவே அதிகாரத்தை தக்க வைத்திருக்கிறது. இரண்டு முறையும் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக சுதர்சனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
2011 வி. மூர்த்தி - (அஇஅதிமுக) - 1,15,468
கனிமொழி (திமுக) - 80,703
2016 சு. சுதர்சனம் (திமுக) - 1,22,082
து. தட்சணாமூர்த்தி (அஇஅதிமுக) - 1,06,829
2021 சு. சுதர்சனம் (திமுக) - 1,51,485
மாதவரம் மூர்த்தி - (அஇஅதிமுக) - 94,414


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்