-->


கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Kolathur Assembly Constituency)


2026 தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
V.S. பாபு (தவெக)
82,997
மு. க. ஸ்டாலின் (திமுக)
74,202
சந்தான கிருஷ்ணன். P (அஇஅதிமுக)
18,430
சௌந்தர பாண்டியன் லூடர் சேத் (நாதக)
5,046


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மக்களவைத் தொகுதி வட சென்னை
தொகுதி உருவாக்கம் 2008
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள்
1,01,791
பெண் வாக்காளர்கள்
1,09,945
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள்
36
மொத்த வாக்காளர்கள்
2,11,772


தொகுதி மறுசீரமைப்பில் 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவான‌து. இதன் தொகுதி எண் 13.

சென்னை மாநகரின் மையமான சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கொளத்தூர் அமைந்துள்ளது. கொளத்தூர், பெரவள்ளூர், செந்தில் நகர், சீனிவாச நகர், அயனாவரம், பெரியார் நகர், பூம்புகார் நகர், ஜவகர் நகர், செம்பியம் போன்ற பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சியின் சரகம் 50 முதல் 54 வரை மற்றும் 62 ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இதுவரை நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. திமுகவின் கோட்டையாக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் மூன்று முறையும் மு.க ஸ்டாலினே வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகையை சூடியிருக்கிறார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
2011 மு. க. ஸ்டாலின் (திமுக) - 68,784
சைதை துரைசாமி (அதிமுக) - 65,965
2016 மு. க. ஸ்டாலின் (திமுக) - 91,303
ஜே.சி.டி. பிரபாகர் (அதிமுக) - 53,573
2021 மு. க. ஸ்டாலின் (திமுக) - 1,05,522
ஆதிராஜாராம் (அதிமுக) - 35,138


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்