2026 தேர்தல் முடிவுகள் |
வேட்பாளர் (கட்சி) |
வாக்குகள் |
| S. விஜயகுமார் (தவெக) |
94,320 |
| V. சுதாகர் (அஇஅதிமுக) |
66,375 |
| டி.ஜெ. கோவிந்தராஜன் (திமுக) |
62,492 |
| இரா. ஸ்ரீதர் (நாதக) |
4,756 |
தொகுதி விவரங்கள் |
| நாடு |
இந்தியா |
| மாநிலம் |
தமிழ்நாடு |
| மாவட்டம் |
திருவள்ளூர் |
| மக்களவைத் தொகுதி |
திருவள்ளூர் |
| தொகுதி உருவாக்கம் |
1957 |
| தொகுதி ஒதுக்கீடு |
பொது |
| ஆண் வாக்காளர்கள் |
1,23,359 |
| பெண் வாக்காளர்கள் |
1,30,734 |
| மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் |
36 |
| மொத்த வாக்காளர்கள் |
2,54,129 |
ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் ஆகியவை இதன் பகுதிகளாக அமைந்துள்ளன. இதன் தொகுதி எண் 1.
இந்தத் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். வன்னியர், ஆதி திராவிடர், நாயுடு சமூக மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
விவசாயம், மீன்பிடி தொழில்கள் பிரதானமாக இருக்கும் கும்மிடிப்பூண்டி, தற்போது சிப்காட் நிறைந்த தொழில் பகுதியாகவும் அறியப்படுகிறது.
1957-ல் (மதராஸ் மாகாணம்) நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கும்மிடிப்பூண்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே இங்கு வெற்றி பெற்று வந்தன.
15 சட்டமன்றத் தேர்தல்களும், 1 இடைத்தேர்தலும் நடைபெற்றிருக்கிறது. அதில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ், தேமுதிக, சுதந்திரா கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.
2005-ல் இங்கு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருந்த அதிமுக-வைச் சேர்ந்த கே.சுதர்சனம், பவாரியா கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கே.சுதர்சனத்தின் மகன் கே.எஸ்.விஜயகுமார், அதிமுக சார்பில் போட்டியிட்டு 83,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த டி.ஜெ. கோவிந்தராஜன், 1,26,452 வாக்குகள் பெற்று தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
முந்தைய தேர்தல் விவரம் |
ஆண்டு |
விவரம் |
| 1957 |
கமலாம்புஜம்மாள் (காங்) - 9,002
வேணுகோபால் ரெட்டி (சுயேச்சை) - 8,908 |
| 1962 |
எ. இராகவ ரெட்டி (சுதந்திரா கட்சி) - 19,575
கே. கமலம் அம்மாள் (காங்) - 18,946 |
| 1967 |
கா. வேழவேந்தன் (திமுக) - 35,887
கே. கமலம் அம்மாள் (காங்) - 31,527 |
| 1971 |
கா. வேழவேந்தன் (திமுக) - 43,355
பி. ரெட்டி (ஸ்தாபன காங்கிரஸ்) - 30,875 |
| 1977 |
ஆர்.எஸ். முனிரத்தினம் (அஇஅதிமுக) - 32,309
கே. கமலம் அம்மாள் (ஜனதா கட்சி) - 21,042 |
| 1980 |
ஆர்.எஸ். முனிரத்தினம் (அஇஅதிமுக) - 41,845
கி. வேணு (திமுக) - 34,019 |
| 1984 |
ஆர்.எஸ். முனிரத்தினம் (காங்) - 55,221
கே. வேழவேந்தன் (திமுக) - 43,174 |
| 1989 |
கி. வேணு (திமுக) - 36,803
கே. கோபால் (அஇஅதிமுக (ஜெ)) - 33,273 |
| 1991 |
ஆர். சக்குபாய் (அஇஅதிமுக) - 61,063
கி. வேணு (திமுக) - 28,144 |
| 1996 |
கி. வேணு (திமுக) - 61,946
ஆர்.எஸ். முனிரத்தினம் (அஇஅதிமுக) - 40,321 |
| 2001 |
கே. சுதர்சனம் (அஇஅதிமுக) - 73,467
கி. வேணு (திமுக) - 48,509 |
| 2005 |
கே.எஸ். விஜயகுமார் (அஇஅதிமுக) - 83,717
பி. வெங்கடாசலபதி (திமுக) - 56,554 |
| 2006 |
கே.எஸ். விஜயகுமார் (அஇஅதிமுக) - 63,147
துரை ஜெயவேலு (பாமக) - 62,918 |
| 2011 |
சி.எச். சேகர் - (தேமுதிக) - 97,708
கே. சேகர் (பாமக) - 68,452 |
| 2016 |
கே.எஸ். விஜயகுமார் (அஇஅதிமுக) - 89,332
சி.எச். சேகர் (திமுக-மக்கள் தேமுதிக) - 65,937 |
| 2021 |
டி.ஜெ. கோவிந்தராஜன் (திமுக) - 1,26,452
பிரகாஷ் (பாமக) - 75,514 |
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்