எழும்பூர் - தனி (SC) சட்டமன்றத் தொகுதி (Egmore (SC) Assembly Constituency) |
1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில், 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, நீக்கப்பட்ட பூங்கா நகர் தொகுதியில் இருந்து சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சில இடங்களும், அண்ணாநகர் தொகுதியில் உள்ள சில பகுதிகளும் இணைக்கப்பட்டன. இதன் தொகுதி எண் 16. இந்த தொகுதியில், எழும்பூர் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் நீதிமன்றம், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, கங்காதீஸ்வரர் கோயில், பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகம் (டி.பி.ஐ.), போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநகராட்சி ரிப்பன் பில்டிங், ராஜரத்தினம் ஸ்டேடியம், நேரு ஸ்டேடியம், ஜான்பாஸ்கோ பள்ளி போன்ற முக்கிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. தற்சமயம் சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45, 46, 47, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரையுள்ள பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அதிகம் கொண்ட எழும்பூர் தொகுதியில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் குறிப்பிடுமளவு இருக்கின்றனர். இதுதவிர, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மக்களும், வட மாநிலத்தவர்களும் இந்த தொகுதியில் அதிக அளவில் வசிக்கின்றனர். மோட்டார் வாகன உதிரி பாகங்கள் அனைத்தும் கிடைக்கும் இடமான புதுப்பேட்டை, பெரிய மேடு, புளியந்தோப்பு போன்ற முக்கிய இடங்கள் இத்தொகுதியில் அமைந்திருக்கிறது. எழும்பூர் (தனி) தொகுதியில், இதுவரை நடந்த தேர்தல்களில் 1957-லில் சுயேட்சை வேட்பாளரும், காங்கிரஸ் 1962, 1980 என இரண்டு முறையும், தேமுதிக 2011ல் ஒருமுறையும் வென்றிருக்கின்றன. 1967, 1971, 1977, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 என 11 தேர்தல்களில் திமுக இத்தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||