2026 தேர்தல் முடிவுகள் |
வேட்பாளர் (கட்சி) |
வாக்குகள் |
| எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக) |
1,48,933 |
| பிரேம்குமார். K (சுயேச்சை) |
50,823 |
| காசி. C (திமுக) |
44,011 |
| பிரியதர்சினி. A (நாதக) |
8,450 |
தொகுதி விவரங்கள் |
| நாடு |
இந்தியா |
| மாநிலம் |
தமிழ்நாடு |
| மாவட்டம் |
சேலம் |
| மக்களவைத் தொகுதி |
சேலம் |
| தொகுதி உருவாக்கம் |
1951 |
| தொகுதி ஒதுக்கீடு |
பொது |
| ஆண் வாக்காளர்கள் |
1,39,680 |
| பெண் வாக்காளர்கள் |
1,36,677 |
| மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் |
30 |
| மொத்த வாக்காளர்கள் |
2,76,387 |
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி (தொகுதி எண் : 86) 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தொகுதியாகும். இருப்பினும். 1957 மற்றும் 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்கவில்லை.
இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்து கணிசமான எண்ணிக்கையில், கொங்கு வேளாளர், முதலியார் மற்றும் பருவதராஜகுல மீனவ சமூகத்தினரும் உள்ளனர்.
இத்தொகுதியில் மாம்பழம், கரும்பு, தென்னை விவசாயம், விசைத்தறி தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகள் பிரதான தொழில்களாக உள்ளன.
கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும் (1977, 1980, 1991, 2011, 2016, 2021), திமுக 2 முறையும் (1967, 1971), காங்கிரஸ் 2 முறையும் (1951, 1984), பாமக 3 முறையும் (1996, 2001, 2006) வெற்றி பெற்றுள்ளன.
தற்போது அதிமுக வசம் உள்ள எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார்.
முந்தைய தேர்தல் விவரம் |
ஆண்டு |
விவரம் |
| 1951 |
கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர் (காங்) - 15,368
எஸ். மாரிமுத்து கவுண்டர் (தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி) - 11,280 |
| 1967 |
ஏ. ஆறுமுகம் (திமுக) - 36,935
கே. எஸ். எஸ். கவுண்டர் (காங்) - 30,593 |
| 1971 |
ஏ. ஆறுமுகம் (திமுக) - 36,935
டி. நடராஜன் (ஸ்தாபன காங்கிரஸ்) - 29,485 |
| 1977 |
இ. கணேசன் (அஇஅதிமுக) - 31,063
டி. நடராஜன் (காங்) - 24,256 |
| 1980 |
இ. கணேசன் (அஇஅதிமுக) - 37,978
டி. நடராஜன் (சுயேச்சை) - 32,159 |
| 1984 |
கோவிந்தசாமி (காங்) - 68,583
பி. ஆறுமுகம் (திமுக) - 27,860 |
| 1989 |
எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக (ஜெ)) - 30,765
எல். பழனிசாமி (திமுக) - 29,401 |
| 1991 |
எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக) - 72,379
பி. கொழந்தா கவுண்டர் (பாமக) - 31,113 |
| 1996 |
இ. கணேசன் (பாமக) - 49,465
பி. எ. முருகேசன் (திமுக) - 40,273 |
| 2001 |
இ. கணேசன் (பாமக) - 74,375
எ. கந்தசாமி (திமுக) - 43,564 |
| 2006 |
வி. காவேரி (பாமக) - 76,027
எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக) - 69,680 |
| 2011 |
எடப்பாடி க. பழனிசாமி - (அஇஅதிமுக) - 1,04,586
மு.கார்த்திக் (பாமக) - 69,848 |
| 2016 |
எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக) - 98,703
ந. அண்ணாதுரை (பாமக) - 56,681 |
| 2021 |
எடப்பாடி க. பழனிசாமி (அஇஅதிமுக) - 1,63,154
த. சம்பத் குமார் (திமுக) - 69,352 |
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்