டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி (Dr. Radhakrishnan Nagar Assembly Constituency)


2026 தேர்தல் நிலவரம்
வேட்பாளர் (கட்சி)
வாக்குகள்
ஜே.ஜே. எபினேசர் (திமுக)
R.S. ராஜேஷ் (அஇஅதிமுக)
வெண்ணிலா (நாதக)
N. மரிய வில்சன் (தவெக)


தொகுதி விவரங்கள்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மக்களவைத் தொகுதி வடசென்னை
தொகுதி உருவாக்கம் 1977
தொகுதி ஒதுக்கீடு பொது
ஆண் வாக்காளர்கள் 95,250
பெண் வாக்காளர்கள் 1,04,013
மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 96
மொத்த வாக்காளர்கள் 1,99,359


டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (சுருக்கமாக ஆர். கே. நகர்) என்பது 1977 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11.

இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14 ஆகியவை இத் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ஆகும்.

ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய அடையாளமே தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேடு தான்.

கடந்த 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற 11 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், அதிமுக இரண்டாக பிளவுபட்டு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தத் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி.தினகரன், இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

அதன் பிறகு 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அவர்களை கிட்டத்தட்ட 42,479 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜே.ஜே. எபிநேசர் வென்றார்.

2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர்.கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

2016 டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து. அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பண விநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்கு முன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

முந்தைய தேர்தல் விவரம்
ஆண்டு
விவரம்
1977 ஐசரி வேலன் (அஇஅதிமுக) - 28,416
ஆர்.டி. சீதாபதி (திமுக) - 26,928
1980 வே. இராஜசேகரன் (காங்) - 44,076
ஐசரி வேலன் (அஇஅதிமுக) - 36,888
1984 ச. வேணுகோபால் (காங்) - 54,334
எஸ்.பி. சற்குண பாண்டியன் (திமுக) - 50,483
1989 எஸ்.பி. சற்குண பாண்டியன் (திமுக) - 54,216
இ. மதுசூதனன் (அஇஅதிமுக (ஜெ)) - 29,960
1991 இ. மதுசூதனன் (அஇஅதிமுக) - 66,710
ராஜசேகரன் (ஜனதாதளம்) - 41,758
1996 எஸ். பி. சற்குண பாண்டியன் (திமுக) - 75,125
ரவீந்திரன் (அஇஅதிமுக) - 32,044
2001 பி.கே. சேகர் பாபு (அஇஅதிமுக) - 74,888
எஸ்.பி. சற்குண பாண்டியன் (திமுக) - 47,556
2006 பி.கே. சேகர் பாபு (அஇஅதிமுக) - 84,462
மனோகர் (காங்) - 66,399
2011 பி. வெற்றிவேல் - (அஇஅதிமுக) - 83,777
பி.கே. சேகர் பாபு (திமுக) - 52,522
2015 ஜெ. ஜெயலலிதா - (அஇஅதிமுக) - 1,60,432
சி. மகேந்திரன் (சிபிஐ) - 9,710
2016 ஜெ. ஜெயலலிதா (அஇஅதிமுக) - 97,218
சிம்லா முத்துச்சோழன் (திமுக) - 57,673
2017 டி.டி.வி. தினகரன் (சுயேட்சை) - 89,013
மதுசூதனன் (அஇஅதிமுக) - 48,306
2021 ஜே.ஜே. எபினேசர் (திமுக) - 95,763
ஆர்.எஸ். ராஜேஷ் (அஇஅதிமுக) - 53,284


தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள்