அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Ambattur Assembly Constituency) |
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 8. சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இந்த தொகுதியில் அடங்குகிறது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள் வடக்கே மாதவரம், தெற்கே மதுரவாயல், கிழக்கே அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கே ஆவடி. அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, சென்னையின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகர்ப்புறத் தொகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. சென்னையின் மிகப் பெரும் தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற் பேட்டையில் 10,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஒரு தேசிய உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு ஐ.டி. நிறுவனங்களும் இங்கு செயல்படுகிறது. அதனால், இத்தொகுதி ஒரு தனித்துவமான சமூக-பொருளாதார மையமாக மாறியிருக்கிறது. இந்த தொகுதி, 2011 முதல் 2021 வரை மூன்று சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும், 2021-ல் திமுக-வும் வெற்றிப்பெற்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||