அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
ஒட்டகம் (Camel) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 9 |
நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)![]() உலகில் ஹிமாலயன், அரபிக் வரையாடு வகைகள் இருந்தாலும், நீலகிரி வரையாடு இனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் ஒரு சில வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளன. தற்சமயம் 17 புதிய வரையாடு வாழ்விடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வரையாடுகள் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சிறுவாணி, பழனி உயர் சிகரங்களில் வசிக்கின்றன. 300 மீட்டர் முதல் 2600 மீட்டர் வரை செங்குத்தான பாறைகள் நிறைந்த மலை புல்வெளிகளே நீலகிரி வரையாடுகளின் வாழ்விடம். மொத்தம் 1.6 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இவை வாழ்கின்றன. வரையாடுகள் சிறிய, கரடுமுரடான உரோமம், மிருதுவான மேனி மற்றும் இரண்டு கொம்புகளை கொண்டது. ஆண் வரையாடுகள் 100 செ.மீ உயரமும், 100 கிலோ வரையிலான எடையுடனும் இருக்கும். பெண் வரையாடு 80 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையுடனும் இருக்கும். குட்டிகள் சாம்பல் பழுப்பு அல்லது இளம் பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்த ஆண் வரையாட்டின் மணிக்கட்டு வெள்ளை நிறத்திலும், பெண் வரையாட்டின் மணிக்கட்டு கருப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. வரையாடுகள் ஆறு மாத கர்ப்பத்துக்குப் பின் ஒரே ஒரு குட்டியை ஈனக்கூடியவை. ஒரு பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் பெறுவதே மிக அரிது. வரையாடுகளில் குட்டிகளின் இறப்பு விகிதம் அதிகம். வரையாடுகள் சராசரியாக மூன்றரை ஆண்டுகளும் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடும். சிறுத்தை, செந்நாய், புலி ஆகிய விலங்குகள் இவற்றை வேட்டையாடுகின்றன. தமிழ்நாட்டின் மாநில விலங்காக வரையாடு தேர்வு செய்யப்படுவதற்கு, சங்க இலக்கியங்களில் இந்தக் காட்டுயிர் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருப்பதே முக்கியக் காரணம். குற்றாலக் குறவஞ்சி நூலில் ‘குறத்தி மலை வளம் கூறல்’ என்ற பாடல் நீலகிரி வரையாடு பற்றி விவரிக்கிறது. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மற்றும் சிவகாசிந்தாமணி மற்றும் எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து மற்றும் பத்துப்பாட்டு ஆகியவற்றில் நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. 1975 ஆம் ஆண்டில் நிலகிரி வரையாடுகள் குறித்த முதல் ஆய்வைத் தொடங்கி, பிற ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த டாக்டர் டேவிடர் நினைவாக அக்டோபர் 7ஆம் தேதி நிலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நிலகிரி வரையாடுகள் தமிழ்நாட்டின் பெருமிதம் அவற்றை காப்பது சோலைக் காடுகளை காப்பதற்கு சமம். வரையாட்டைப் பாதுகாப்பதை, தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்க வேண்டும். |