பாரத ரத்னா விருது

பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும். இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருது பெரும்பாலும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டாலும், முதன் முதலாக வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. பின்னர் இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

பாரத ரத்னா விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது. (விதி 18 (1) ) தேவைப்பட்டால், “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்

1. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (1878-1972) - 1954 - தமிழ்நாடு
2. சர் சி. வி. இராமன் (1888-1970) - 1954 - தமிழ்நாடு
3. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1888-1975) - 1954 - தமிழ்நாடு
4. பகவான் தாஸ் (1869-1958) - 1955 - உத்தர பிரதேசம்
5. மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (1861-1962) - 1955 - கர்நாடகா
6. ஜவஹர்லால் நேரு (1889-1964) - 1955 - உத்தர பிரதேசம்
7. கோவிந்த் வல்லப் பந்த் (1887-1961) - 1957 - உத்தர பிரதேசம்
8. முனைவர் தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958 - மகாராஷ்டிரா
9. மருத்துவர் பிதான் சந்திர ராய் (எ) பி.சி.ராய் (1858-1962) - 1961 - மேற்கு வங்காளம்
10. புருஷோத்தம் தாஸ் டாண்டன் (1882-1962) - 1961 - உத்தர பிரதேசம்
11. டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (1884-1963) - 1962 - பீகார்
12. ஜாகீர் உசேன் (1897-1969) - 1963 - ஆந்திர பிரதேசம்
13. முனைவர் பாண்டுரங்க வாமன் காணே (1880-1972) - 1963 - மகாராஷ்டிரா
14. லால் பகதூர் சாஸ்திரி (1904-1966) - 1966 (மறைவுக்குப் பிறகு) - உத்தர பிரதேசம்
15. இந்திரா காந்தி (1917-1984) - 1971 - உத்தர பிரதேசம்
16. வி. வி. கிரி (1894-1980) - 1975 - ஆந்திர பிரதேசம்
17. காமராசர் (1903-1975) - 1976 (மறைவுக்குப் பிறகு) - தமிழ்நாடு
18. ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (எ) அன்னை தெரேசா (1910-1997) - 1980 - (இந்திய குடியுரிமை பெற்றவர்) மேற்கு வங்கம்
19. ஆச்சார்யா வினோபா பாவே (1895-1982) - 1983 (மறைவுக்குப் பிறகு) - மகாராஷ்டிரா
20. கான் அப்துல் கப்பார் கான் - (1890-1988) - 1987 - (முதல் வெளிநாட்டவர்) - பாகிஸ்தான்
21. எம். ஜி. இராமச்சந்திரன் (1917-1987) - 1988 (மறைவுக்குப் பிறகு) - தமிழ்நாடு
22. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891-1956) - 1990 (மறைவுக்குப் பிறகு) - மகாராஷ்டிரா
23. நெல்சன் மண்டேலா (1918-2013) - 1990 (இரண்டாவது வெளிநாட்டவர்) - தென் ஆப்பிரிக்கா
24. ராஜீவ் காந்தி (1944-1991) - 1991 (மறைவுக்குப் பிறகு) - புதுதில்லி
25. சர்தார் வல்லப்பாய் படேல் (1875-1950) - 1991 (மறைவுக்குப் பிறகு) - குஜராத்
26. மொரார்ஜி தேசாய் (1896-1995) - 1991 - குஜராத்
27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (1888-1958) - 1992 (மறைவுக்குப் பிறகு) - மேற்கு வங்காளம்
28. ஜே. ஆர். டி. டாட்டா(எ) ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (1904-1993) - 1992 - மகாராஷ்டிரா
29. சத்யஜித் ராய் (1922-1992) - 1992 - மேற்கு வங்காளம்
30. குல்சாரிலால் நந்தா (1898-1998) - 1997 - பஞ்சாப்
31. அருணா ஆசஃப் அலி (1908-1996) - 1997 (மறைவுக்குப் பிறகு) - மேற்கு வங்காளம்
32. டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (எ) ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (1931-2015) - 1997 - தமிழ்நாடு
33. டாக்டர் எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) - 1998 - தமிழ்நாடு
34. சி. சுப்பிரமணியம் (1910-2000) - 1998 - தமிழ்நாடு
35. ஜெயபிரகாஷ் நாராயண் (1902-1979) - 1998 (மறைவுக்குப் பிறகு) - உத்தர பிரதேசம்
36. பண்டிட் ரவி சங்கர் (1920-2012) - 1999 - உத்தர பிரதேசம்
37. டாக்டர் அமர்த்தியா சென் (பிறந்தது 1933) - 1999 - மேற்கு வங்காளம்
38. கோபிநாத் போர்டோலாய் (1890-1950) - 1999 (மறைவுக்குப் பிறகு) - அசாம்
39. உஸ்தாத் பிஸ்மில்லா கான் (1916-2006) - 2001 - உத்தர பிரதேசம்
40. லதா மங்கேஷ்கர் (பிறந்தது 1929) - 2001 - மகாராஷ்டிரா
41. பீம்சென் ஜோஷி (1922-2011) - 2009 - மகாராஷ்டிரா
42. சி. என். ஆர். ராவ் (பிறந்தது 1934) - 2014 - கர்நாடகா
43. சச்சின் டெண்டுல்கர் (பிறந்தது 1973) - 2014 - மகாராஷ்டிரா
44. பண்டிதர் மதன் மோகன் மாளவியா (1861-1946) - 2015 - உத்தர பிரதேசம்
45. அடல் பிகாரி வாஜ்பாய் (பிறந்தது 1924) - 2015 - மத்திய பிரதேசம்



அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888